திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

சீர்காழியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

DIN | Published: 11th September 2018 08:20 AM

சீர்காழி ஈசானியத் தெருவில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை (செப்.13) கொண்டாடப்படுவதையொட்டி, சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செல்வ விநாயகர், ரயிலடி விநாயகர், வரசித்தி விநாயகர், மங்கள விநாயகர், மங்கையர்கரசி விநாயகர், செங்கழுநீர் விநாயகர், உதயபானு விநாயகர் மற்றும் தான்தோன்றீசுவரர் விநாயகர் கோயில் உள்ளிட்ட 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக சீர்காழி ஈசானியத் தெருவில் தான்தோன்றீசுவரர் விநாயகர் கோயில் பகுதியில் சுமார் 9 அடி உயரம் கொண்ட அனுமன் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் விநாயகர் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலை விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.
 

More from the section

நாகை கல்லூரியில் நூலகவியல் தேசியக் கருத்தரங்கு
தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் தூய்மைப்பணி
துலாக்கட்ட காவிரியில் பிரதோஷ வழிபாடு
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை


அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு