புதன்கிழமை 14 நவம்பர் 2018

ரயில் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

DIN | Published: 11th September 2018 08:21 AM

சீர்காழி அருகே திங்கள்கிழமை ரயில் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார். 
சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை வைரவனிருப்பு ஏரி பகுதியைச் சேர்ந்தவர் தோமஸ் மகன் சகாயராஜ் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திருமைலாடி ரயில்வே கேட் அருகில் ரயில் பாதை ஓரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே கால் துண்டாகி உயிரிழந்தார். தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே சார்பு ஆய்வாளர் மனோன்மணி தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து சகாயராஜூவின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

More from the section

நாகை: 8 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆய்வு
ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பில் மாற்றம் செய்ய 15-க்குள் மனு அளிக்கலாம்
வங்கி கிளை இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை அமைக்க அரசாணை: தமிழக அரசுக்கு பாஜக நன்றி