புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

DIN | Published: 11th September 2018 08:19 AM

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. 
கிளியனூர், திருக்கடையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான படிவங்களை பூர்த்தி செய்து, ஏராளமானோர் வழங்கினர். இதில் திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

More from the section


அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்பு

தொழிற் பயிற்சி அலுவலர் சங்க பிரசார இயக்கக் கூட்டம்
ரோட்டரி சங்க விழாவில் ஆசிரியர்களுக்கு விருது
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி பிறந்த நாள்
சுவடே இல்லாமல் மறைந்த வாய்க்காலை தூர்வாரும் பணி: ஆட்சியருக்கு விவசாயிகள் பாராட்டு