18 நவம்பர் 2018

அண்ணா பிறந்த நாள் விழா விரைவு சைக்கிள் போட்டி: நாளை நடைபெறுகிறது

DIN | Published: 12th September 2018 06:54 AM

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி நாகையில் வியாழக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி, நாகையில் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. 13 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தொலைவையும், மாணவியர் 10 கிலோ மீட்டர் தொலைவையும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவையும், மாணவியர் 15 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். 
போட்டியில் பங்கேற்பவர்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற வகுப்பு சான்று மற்றும் வயது சான்றை அவசியம் கொண்டு வர வேண்டும். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுவபர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்குத் தகுதிச் சான்று வழங்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

More from the section

சீர்காழியில் 200 மின்கம்பங்கள், 600 மரங்கள் சாய்ந்தன
"கஜா'-வின் சூறையாட்டம்! 9 பேர் சாவு: 11 ஆயிரம் வீடுகள் சேதம்
கஜா புயலால் வாழை, பொங்கல் கரும்பு சேதம்
வேளாங்கண்ணி தேவாலயம் சேதம்
புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகளில் 362 பேர்: தென்காசி சு. ஜவஹர்