செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 12th September 2018 06:52 AM

நாகை மாவட்ட திருக்கோயில்களில் காலியாக உள்ள இரவு பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில், 54 கோயில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.  விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், நாகை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More from the section

நாகை கல்லூரியில் நூலகவியல் தேசியக் கருத்தரங்கு
தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் தூய்மைப்பணி
துலாக்கட்ட காவிரியில் பிரதோஷ வழிபாடு
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை


அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு