18 நவம்பர் 2018

செய்தித் தாள்களில் வைத்து பலகாரங்கள் விற்பதை தவிர்க்க வேண்டும்: சார்-ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர்

DIN | Published: 12th September 2018 06:53 AM

பிளாஸ்டிக் பைகளில் தேநீர் விற்பனை செய்துவது, செய்தித் தாள்களில் வைத்து பலகாரங்களை விற்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றார் நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர். 
நாகையில் திங்கள்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது: பிளாஸ்டிக் கேரி பைகளில் தேநீர் விற்பனை செய்வது, செய்தித் தாள்களில் வைத்து பலகாரங்களை விற்பது உள்ளிட்டவைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை அமலாகவுள்ளதையொட்டி, தற்போதிலிருந்து உணவு விற்பனையாளர்கள் மாற்று ஏற்பாடுகளுக்குத் தயாராக வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.  
2019-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல், பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து, உணவு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய தொழிற் குழுமத் தலைவர் வி. இராமச்சந்திரன், ஹோட்டல், தேநீர் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில், தேசிய சுகாதாரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜா, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆர். இராமசுப்பு, தொழிலாளர் உதவி ஆணையர் பி. பாஸ்கரன்,  புள்ளியியல் அலுவலர் ப. அந்துவன் சேரல் ஆகியோர் பேசினர்.  நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் வரவேற்றார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் டி. மகாதேவன் நன்றி கூறினார்.

More from the section

அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகளில் திருப்தியில்லை


புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றம்

கார்த்திகை மாதப் பிறப்பு: சீர்காழி கோயிலில் கோ பூஜை வழிபாடு: அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி
புயல் சீற்ற சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்
சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரம்