23 செப்டம்பர் 2018

திருமருகலில் விவசாயக் கடன் வழங்கும் பணி தொடக்கம்

DIN | Published: 12th September 2018 06:51 AM

நாகை மாவட்டம், திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 2018-19 ஆம் ஆண்டில், 90 விவசாயிகளுக்கு ரூ. 59.38 லட்சம் கடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டப்படி, விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி, கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றது. திருமருகல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். கூட்டுறவு சங்க இயக்குநர்கள், திருமருகல், சேகல், சீயாத்தமங்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நல்லமுத்து வரவேற்றார். சங்க துணைத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
 

More from the section

ரயில் நிலையத்தில் சுகாதாரப் பணிகள்
புதிய அங்காடி கட்டடம் திறப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
நாய் கடித்து புள்ளி மான் சாவு
சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்