திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

நாகையில் இன்று சமுத்திரப் பூஜை

DIN | Published: 12th September 2018 06:52 AM

நாகை,  அக்கரைப்பேட்டை அருள்மிகு     முத்து மாரியம்மன் கோயில்  செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சமுத்திரராஜ  வழிபாடு புதன்கிழமை (செப். 12)  நடைபெறுகிறது.
 அக்கரைப்பேட்டை  அருள்மிகு  முத்து மாரியம்மன் கோயிலில்  ஆண்டு தோறும் செடில்  திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டின் செடில் திருவிழா செப். 6-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது.  திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் அம்பாள் பிராகாரப் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 
  செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சமுத்திரராஜ (வங்கக் கடல்) வழிபாடு புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.  இதையொட்டி,  காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனைகளும், கடஸ்தாபனமும்  நடைபெறுகிறது. 
 பின்னர், கோயிலிலிருந்து அக்கரைப்பேட்டை கடற்கரைக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. காலை சுமார் 9.30 மணி அளவில், அக்கரைப்பேட்டை கடற்கரையில் சமுத்திரராஜ வழிபாடாக, பால் மற்றும் பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களை கடலுக்கு சமர்ப்பிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
 

More from the section

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தைப் போக்க கோரிக்கை
புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால நிவாரணப் பணிகள்: கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
புரட்டிப் போட்ட கஜா: சொந்த ஊரிலேயே அகதிகளாக தவிக்கும் மக்கள்
புயல் பாதித்தப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கக் கோரிக்கை