புதன்கிழமை 21 நவம்பர் 2018

லாரி மோதி இளைஞர் சாவு

DIN | Published: 12th September 2018 06:50 AM

பொறையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார். 
பொறையாறு அருகேயுள்ள சின்னங்குடியைச் சேர்ந்தவர் செல்வமணி மகன் நந்திஷ் (20) செவ்வாய்க்கிழமை காரைக்காலிலிருந்து சின்னங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர் செல்லும் சாலையில் அம்மனாறு பாலம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கும் லாரி பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நந்திஷ் அம்மனாறு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த பொறையாறு போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று நந்திஷ் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

More from the section

மீலாது நபி விழா
சூறைக்காற்றால் நூற்றாண்டுகால அரச மரம் சாய்ந்தது
வேதாரண்யத்தில் தொடர் மழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு: வீடுகளை இழந்த மக்கள் அவதி
"மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது'
மாநில கபடிப் போட்டியில்  சீனிவாசா பள்ளி மாணவர்கள் சாதனை