பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

திருநாங்கூர் திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா திங்கிள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநாங்கூர் திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா திங்கிள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநாங்கூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீசெங்கமலவல்லிநாயகி சமேத ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் மூலவர் பெருமாள் ஸ்ரீரங்கத்தை போன்று சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், உத்ஸவ கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் 
நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com