நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்குப் பாராட்டு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா வியாழக்கிழமை நடத்தினர்.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா வியாழக்கிழமை நடத்தினர்.
வேதாரண்யம் அருகே உள்ள உம்பளச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர் கு.வீரமணி. இவர், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ததோடு, பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தார். இவரது பணியால் இந்த பள்ளிக்கு ஏற்கெனவே சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில், தலைமையாசிரியர் கு. வீரமணிக்கு நிகழாண்டுக்கான தமிழக நல்லாசிரியர் விருது அண்மையில் வழங்கப்பட்டது. இதையொட்டி, இவருக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில், தலைமையாசிரியர் கு.வீரமணிக்கு உம்பளச்சேரி பாரம்பரிய இன மாட்டின் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. விழாவுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் வி.சுப்பிரமணியன், தை.லீனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள மைய பயிற்றுநர் எம்.பழனிவேலு, நல்லாசிரியர் கலையரசன், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பி.பி.ராமமூர்த்தி, என்.ராசேந்திரன், கே.என்.செந்தில்குமார், எம்.அம்பிகாபதி, பாரம்பரிய மாடு வளர்ப்போர் சங்கச் செயலாளர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்று தலைமையாசிரியர் கு. வீரமணியைப் பாராட்டிப் பேசினர். பள்ளி ஆசிரியை கலையரசி வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com