பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க பொதுச் செயலாளர் ஜெ. லெட்சுமி நாராயணனுக்கு குற்ற குறிப்பாணை வழங்கியதைக் கண்டித்தும், தொழுநோய் ஆய்வாளர்களாகப் பணியாற்றி, சுகாதார ஆய்வாளர்களாக பணிமாற்றம் பெற்றவர்களுக்கான பதவி உயர்வு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலத் தணிக்கையாளர் ஏ.டி. அன்பழகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அலுவலர் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. அமிர்தகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.  புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ப. அந்துவன்சேரல், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பா.ராணி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ராஜூ ஆகியோர் பேசினர்.
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் டி. குணசேகரன் நன்றி கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com