சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

குத்தாலம் ஒன்றியத்தில் சனிக்கிழமை 3 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


குத்தாலம் ஒன்றியத்தில் சனிக்கிழமை 3 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
குத்தாலம் ஒன்றியம் தொழுதாலங்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 2017-2018-ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம பிரமுகர் சி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டார வள அலுவலர் கே.சேகர் கலந்து கொண்டு 2017-2018-ஆம் ஆண்டில் ரூ. 9.31 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகள் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள், பணிகளின் விவரங்கள் வாசித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து புதிய வேலை அட்டை கோருவது உள்ளிட்ட 42 மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல், கொத்தங்குடி ஊராட்சியில் கிராம பிரமுகர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு 2017-2018-ஆம் ஆண்டில் ரூ. 13 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகள் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள், பணிகளின் விவரங்கள் வாசித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 15 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதேபோல், கழனிவாசல் ஊராட்சியில் கிராம பிரமுகர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வட்டார வள அலுவலர் சுகுணா கலந்து கொண்டு 2017-2018-ஆம் ஆண்டில் ரூ. 7.36 லட்சம் செலவில் செய்யப்பட்ட 3 பணிகள் தணிக்கை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com