நாகப்பட்டினம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி உறுதி: டிடிவி. தினகரன்

DIN

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன். 
நாகை, புதிய பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டபோது மேலும் அவர் பேசியது: தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா மேற்கொண்ட  முயற்ச்சியால் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. எங்களால் பதவியில் உள்ள எடப்பாடி   கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 33 அமைச்சர்கள் தற்போது எங்களை பார்த்து  யார் என கேட்கின்றனர். 
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசுக்கு முடிவு  கட்டவேணடும். வடக்கில் ஆளும் பாஜகவின் கிளை   அரசாங்கம் தான் தமிழகத்தில் நடைபெறுகிறது. 
தமிழக மக்கள் நியாயம் தர்மத்தின் பக்கமே உள்ளனர். ஆர். கே. நகர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட   என்னைத் தோற்கடிக்க அதிமுகவினர் ரூ. 180 கோடி செலவு செய்தனர். அமைச்சகள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். தர்மமும் , நியாயமும் என் பக்கம் இருந்ததால் சுயேச்சை வேட்பாளரான நான் வெற்றிப் பெற்றேன். தமிழக அரசியல் வரலாற்றில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றது அதுவே முதல் முறை. மக்களும், இளைஞர்களும் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே. நகர் வெற்றியைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலிலும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி  பெறுவது உறுதி.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்
பட்டுள்ளன.
நாகப்பட்டினம் துறைமுகம் மேம்படுத்தப்பட வேண்டும், மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட  நாகப்பட்டினம் பகுதிவாழ் மக்களின் கோரிக்கைகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
முன்னதாக, நாகை மாவட்டம், திருக்குவளை, கீழ்வேளூர், வலிவலம், சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் பகுதிகளில் டிடிவி. தினகரன் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டார். இதில், கட்சியின் நாகை தெற்கு மாவட்டச் செயலர் ஆர். சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT