வேளாங்கண்ணியில் புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. 


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. 
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய  அன்னை பேராலயம் எண்ணற்ற மகிமைகளையும், புதுமைகளையும் கொண்டது. கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில், ஈஸ்டர் பண்டிகையின் முந்தைய நிகழ்வுகளான தவக்கால நிகழ்வுகள் மார்ச் 6 ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமைகளில் புனிதப் பாதையில் சிலுவைப் பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏப்ரல் 18ஆம் தேதி தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி திருச்சிலுவை ஆராதனையும் நடைபெற்றது.
இதன்தொடர்ச்சியாக, ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கியது. பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் வழிபாடுகளை நிறைவேற்றினார். இதையடுத்து, சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கும் வகையில் இயேசுபிரானின் சொரூபம் பக்தர்களுக்கு இரவு 11.50 மணிக்கு ஒளி காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மன்றாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இறை புகழ்ச்சி முழக்கங்களுடன் வழிபாடு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சி
களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிருந்து பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com