நாங்கூர் நூலகத்துக்கு மின் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

சீர்காழி அருகே நாங்கூரில் உள்ள கிளை நூலகத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே நாங்கூரில் உள்ள கிளை நூலகத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாங்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் 1961-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான ஓட்டுக் கட்டடத்தில்  2.5.1962 அன்று தொடங்கப்பட்டது.  இந்த நூலகத்தில் 18ஆயிரத்து 133 நூல்கள் உள்ளன. அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்திலிருந்து இந்த நூலகத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர், தனித்தனியாக ஒவ்வொரு துறையும் மின் இணைப்பு பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஊராட்சி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், கடந்த 3ஆண்டுகளுக்கும் மேலாக கிளை நூலகம் மின் வசதி இல்லாமல் இயங்கி வருகிறது. மேலும், பழமையான ஓட்டுக் கட்டடம் என்பதால், மழை காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் சேதமடைகின்றன. நாங்கூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியுடன் நூலகம் இணைவு பெற்றுள்ளதால், அப்பள்ளி மாணவர்கள் நாள்தோறும் மாலை நேரங்களில் நூலகத்திற்கு வந்து நூல்களை வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் பகல் நேரத்திலும்நூலகத்துக்குள் வெளிச்சம் இல்லாததால் வாசகர்கள் புத்தகங்களை வாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, இந்த நூலகத்தை சீரமைத்து, மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com