வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா

நாகை மாவட்டம்,வேதாரண்யம் எனும் திருமறைக்காடு, திருமறைக்காடர் ( வேதாரண்யேசுவரர்) கோயிலில்

நாகை மாவட்டம்,வேதாரண்யம் எனும் திருமறைக்காடு, திருமறைக்காடர் ( வேதாரண்யேசுவரர்) கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத் திருவிழா 
நடைபெற்றது.
வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவில் தெப்பத் திருவிழா சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் வர்த்தகர் சங்கம் சார்பில் நடைபெறும் தெப்பத் திருவிழா கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கர்ணிகை தீர்த்தத்தில் நடைபெற்றது. கல்யாணசுந்தரர் தெப்பத்தில் எழுந்தருளினார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை காண குழந்தைகள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.தென்னரசு தலைமையிலான சங்க நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவையொட்டி,பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன் தலைமையில் குடும்ப நலனுக்கு பெரிதும் விட்டுக்கொடுப்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com