ஒருங்கிணைந்த பண்ணையம் தொழில்நுட்பப் பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய பொறுப்பு அலுவலர் என். சம்பத்குமார் பயிற்சியைத் தொடங்கி வைத்து, வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகளை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் ஆர். ஜெயராமன், கால்நடை பராமரிப்புத் துறை தொழில்நுட்ப வல்லுநர், முனைவர் கோ. சந்திரசேகர், மீன்வள விரிவாக்கத் துறை தொழில்நுட்ப வல்லுநர் ஹினோ பர்னான்டோ ஆகியோர் பேசினர். கறவை மாடுகள் மேலாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, தேங்காய் நார்க்கழிவு உரம் தயாரிப்பு, பஞ்சகவ்யம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, திலேப்பியா மற்றும் கூட்டு மீன் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர். வேளாண் அறிவியல் நிலையத் தொழில்நுட்ப அலுவலர் வீ. ஞானபாரதி, பண்ணை மேலாளர் ரெ. வேதரெத்தினம், கணினி அலுவலர் கோ. ரம்யா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com