நாகப்பட்டினம்

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வேட்பு மனு தாக்கல்

DIN

மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்த பண்டக சாலைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மொத்தம் 20 நிர்வாகக்குழு உறுப்பினர்களில், 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தனி நபர் உறுப்பினர்களில் இருந்தும், 3 நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகளில் இருந்தும், 1 நிர்வாகக்குழு உறுப்பினர், கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகளில் இருந்தும், 1 நிர்வாகக்குழு உறுப்பினர், இதர கூட்டுறவு சங்க நிர்வாகிகளில் இருந்தும் விண்ணப்பம் செய்யலாம். 
இத்தேர்தலுக்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், மாயூரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோரின் முன்னிலையில், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன்னாள் தலைவர் எஸ்.அலி, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வி.சி. காமராஜ் உள்ளிட்டோர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாயூரம் நகர கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் தே. சொர்ணலட்சுமி தேர்தல் அலுவலராக செயல்பட்டு, வேட்பு மனுக்களை பெற்று, பரிசீலனைக்கு பின்னர் ஒப்புதல் ரசீதை வழங்கினார். வேட்பு மனு பரிசீலனை மற்றும் செல்லத்தக்க மனுக்கள் பட்டியல் வெளியிடுதல் சனிக்கிழமை நடைபெறுகிறது. பிப்ரவரி 25-ஆம் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அதே நாளில் போட்டியிடும் வேட்பாளரின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.  வாக்குப் பதிவு மார்ச்.1-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT