நாகப்பட்டினம்

நாகையில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு

DIN


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், போக்குவரத்துக் கழக நாகை மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்த அவர், பணிமனையைப் பார்வையிட்டு,  நாகை மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தடங்கள், மேம்பாட்டுக்கான தேவைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 
பின்னர், நாகை புதிய பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருச்சி வழித்தடப் பேருந்து ஒன்றின் இருக்கைகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, பேருந்து பயணிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, அரசுப் பேருந்துகளின் இருக்கைகளை சீரமைக்க வேண்டும், பேருந்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பேருந்து பயணிகள் அவரிடம் வலியுறுத்தினர். இது குறித்து அரசின் கவனத்துக் கொண்டுச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தது: 
21 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளையும், 26 மண்டலங்களையும், 323 பணிமனைகளையும் கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளைக் கொண்ட போக்குவரத்துக் கழகமாக விளங்குகிறது. 
அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான சேவை மேம்பாடுகள் குறித்து, முதல்வரின் அறிவுறுத்தல்படி ஆய்வு செய்யப்படுகிறது. பேருந்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள், தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அரசு மூலம் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT