திருவாவடுதுறை ஆதீனம் பொங்கல் வாழ்த்து

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தைத் திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாள் பல்வேறு சிறப்புகளை உடையது.  சிறந்த ஆன்மிகப் பின்னணியும் கொண்டது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளாக உள்ளதால், இந்நாள் மகர சங்கராந்தி எனப்படும். தேவர்களுக்கு இது விடியற்காலையாகும்.
தை மாதப் பிறப்பு உத்தராயணம் என்று சொல்லக் கூடிய புண்ணிய நாளாகும். உலகத்துக்கே வாழ்வாதாரமாக இருக்கும் உழவுத் தொழிலை போற்றும் நாளாக தைத் திருநாள் விளங்குகிறது.
தனக்கு முன்னும் பின்னும் சிறந்த திருநாளை கொண்டு விளங்குவது தைப்பொங்கல் நாளின் தனித்தன்மையாகும். தை மாதத்தை வரவேற்க முந்தைய நாளிலேயே இல்லங்களை தூய்மை செய்கிறோம். இதைப் போல உள்ளங்களும் தூய்மையாக வேண்டும். அதன் பொருட்டு, விடத்தக்க ஒவ்வாதப் பண்புகள் இருப்பின், அவற்றை விட்டொழிக்க வேண்டும். இத்தகைய நல்ல முடிவை எடுப்பதற்கு உரிய நன்னாளே போகி.
மறுநாள் உழவுக்கு  உறுதுணையாகும் மாடுகளை போற்றக் கூடிய மாட்டுப் பொங்கல் நாளாகும். விலங்கினங்களை அரவணைத்து வாழும் சிறந்த பண்பினை வளர்த்துக் கொள்ள இந்நாள் உதவுகிறது.  "பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்று திருக்குறள் உரைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். புண்ணியங்களை மேன்மேலும் பெருக்குவதிலும், பாவங்களை தவிர்ப்பதிலும் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட்டால், உலகில் வளங்கள் பெருகும். இயற்கைப் பேரிடர்கள் வராமல் நீங்கும்.  இந்த தைப் பொங்கல் எல்லோருக்கும் வளங்கள் பல பெற்று வாழ்வாங்கு  வாழ்வதற்கு உறுதுணையாக வேண்டும் என்று நமது ஆன்மார்த்த மூர்த்தியாகிய ஸ்ரீநடராஜப் பெருமான் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறோம் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com