தொகுப்பு வீடுகள் மறு சீரமைப்பு: திட்ட இயக்குநர் ஆய்வு

சீர்காழியை அடுத்த விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்றுவரும் தொகுப்பு வீடுகள் மறு சீரமைப்புப்

சீர்காழியை அடுத்த விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்றுவரும் தொகுப்பு வீடுகள் மறு சீரமைப்புப்  பணியை மாவட்ட  திட்ட இயக்குநர் சங்கர் அண்மையில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 
விளந்திடசமுத்திரத்தில் தொகுப்பு வீடுகள் மறுசீரமைப்பு பணிகள், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகள், பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர்,  திருப்புன்கூர் ஊராட்சியில் நடைபெறும் உறிஞ்சுகுழி அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணிகளையும், கற்கோவில், நாங்கூர் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்
பணிகளையும் ஆய்வு செய்தார். 
பின்னர், அவர் கூறியது: நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஊராட்சி மன்ற அலுவலகம்,சிமென்ட் சாலை, சிறுபாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.347.26 கோடிசெலவில் நடைபெற்று வருகின்றன. 
இத்திட்டத்தின் கீழ் சீர்காழி வட்டத்தில் ரூ.51.23 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் முத்துகுமார், உதவி பொறியாளர் தாரா, ஒப்பந்ததாரர் மாமல்லன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com