செம்பனார்கோவிலில் 29-இல் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஜன.


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் ம. ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொழிலாளர் துறை மூலம் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் ஜன. 29-ஆம் தேதி நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்கள் பங்கேற்று, நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு பெற முனைப்பு காட்டுமாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com