வேளாங்கண்ணியில் மரியியல் ஆய்வரங்கம்

வேளாங்கண்ணி மரியியல் பயிலகம் சார்பில், வேளாங்கண்ணி பேராலய தியான இல்லத்தில் புதுமைக் காட்சிகள்


வேளாங்கண்ணி மரியியல் பயிலகம் சார்பில், வேளாங்கண்ணி பேராலய தியான இல்லத்தில் புதுமைக் காட்சிகள் குறித்த ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி திருத்தலத்தில் புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய காட்சிகளின் வரலாறு, திருத்தலங்கள் மதநல்லிணக்க மையங்களாக திகழும் முறைகள் மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஏற்கும் காட்சிகளின் அடிப்படைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் இந்த ஆய்வரங்கம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் வேளாங்கண்ணியில் நடைபெறுகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு, வேளாங்கண்ணி, மரியியல் பயிலக இயக்குநர் எஸ். ஜான்சன் எட்வர்ட் தலைமை வகித்தார். புதுச்சேரி மறை மாவட்ட கல்வித் துறை செயலாளர் ஜோசப் ராஜ் அறிமுக உரையாற்றினார். 
விவிலியத்தில் காட்சிகள் என்ற தலைப்பில் சென்னை, குருத்துவக் கல்லூரி முன்னாள் அதிபர் எஸ்.ஜெ. அந்தோனிசாமி பேசினார். காட்சிகள்- இறையியல் மற்றும் தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில் தாணிக்கோட்டகம் பங்குத்தந்தை ஜி.வி. பன்னீர்செல்வம் பேசினார். தஞ்சை, புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் நெறியாளராக செயல்பட்டார். பிற்பகல் அமர்வாக நடைபெற்ற ஆய்வரங்கில், திருச்சபையில் அங்கீகரிக்கப்பட்ட காட்சிகள் என்ற தலைப்பில் அருட்தந்தை பிரிட்டோ பேசினார். 
உளவியல் அறிஞர் பார்வையில் காட்சிகள் என்ற தலைப்பில் மதுரை இயேசு சபை ஆற்றுப்படுத்துதல் மைய இயக்குநர் இம்மானுவேல் ஆரோக்கியம் பேசினார். தஞ்சாவூர் புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் பள்ளி தாளாளர் டி. ஆரோக்கிய பாஸ்கர் நெறியாளராக
செயல்பட்டார். 
முன்னதாக, வேளாங்கண்ணி பேராலய உதவி அதிபர் சூசைமாணிக்கம் வரவேற்றார். 2017-18-ஆம் ஆண்டில் மரியியல் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com