கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: 10 நாள்களாக வீணாகும் தண்ணீர் 

சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி ஊராட்சியில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், 10 நாள்களாக குடிநீர் வீணாகிவருகிறது.

சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி ஊராட்சியில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், 10 நாள்களாக குடிநீர் வீணாகிவருகிறது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 42 பஞ்சாயத்துகளில், 17 பஞ்சாயத்துகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓதவந்தான்குடி ஊராட்சி வழியாக செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயின் திருநீலகண்டம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த 10 நாள்களாக தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. சுமார் 1,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும், குழாய் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் தண்ணீரை பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து, தண்ணீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com