திருப்பார்த்தன்பள்ளி பெருமாள் கோயில் புஷ்கரணி புனரமைப்பு

சீர்காழி அருகே உள்ள திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சிட்டி யூனியன் வங்கி

சீர்காழி அருகே உள்ள திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ. 40 லட்சத்தில்  புனரமைக்கப்பட்ட புஷ்கரணியை புனர்தாரணம் செய்யும் தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 
சீர்காழி அருகே திருப்பாத்தன்பள்ளியில் அருள்பாலிக்கும் செங்கமலவல்லித் தாயார் உடனாகிய பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கட்க புஷ்கரணி உள்ளது.  யுத்தத்தில் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிட அர்ஜூனன் பார்த்தன்பள்ளிக்கு வந்து நீராட இந்த புஷ்கரணியை உருவாக்கினார் என்பது ஐதீகம். இதில் நீராடினால் அனைத்து கர்மவினைகளும், பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு பெற்ற இந்த  கட்க புஷ்கரணி சிதிலமடைந்திருந்ததால், சிட்டி யூனியன் வங்கி சார்பில்  ரூ.40 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதையடுத்து, புஷ்கரணியை புனர்தாரணம் செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புஷ்கரணி புனர்தாரணம் தீர்த்தவாரி நிகழ்ச்சி சங்கரன் பட்டாச்சாரியார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மோகன், மத்திய திட்ட அதிகாரி பாலசுப்பிரமணியன், துணை பொது மேலாளர் கிருஷ்ணன், உதவி பொது மேலாளர் கணேசன் ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com