புயலில் தப்பிய மரங்களை பராமரிப்பது குறித்த பயிற்சி முகாம்

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் தப்பிய மா, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரங்களைப் பராமரிக்க 

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் தப்பிய மா, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரங்களைப் பராமரிக்க நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுவது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பெரியகுத்தகை கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், பகுதி பாதிக்கப்பட்டு அல்லது தப்பிய மரங்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பாதித்த மரங்களை சரிசெய்து பராமரிப்பது போன்றவை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அத்துடன், இந்த மரங்களுக்குத் தேவையான இயற்கை இடுபொருள்களைத் தயாரிப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் முனைவர் செல்வமுகிலன், இராஜவேலன் ஆகியோர் இப்பயிற்சியை அளித்தனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மு. அருள்செல்வம், சா. தினேஷ் உள்ளிட்டோர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com