"பெண் குழந்தைகளை காப்போம்' விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ஊராட்சி உச்சிமேடு பகுதியில் மக்கள் குரல் கலைக்குழு சார்பில் பெண் குழந்தைகளை

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ஊராட்சி உச்சிமேடு பகுதியில் மக்கள் குரல் கலைக்குழு சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்  விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 841பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளது தெரியவந்தது. இதில் கடலூர், நாகை போன்ற சில மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதை சரி செய்ய, மத்திய அரசு பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இத்திட்டத்தின்படி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் இசை நாடகம் பிரிவு சார்பில், தமிழ்நாட்டில் ஊராட்சிகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் மக்கள் குரல் கலைக் குழுவின் சார்பில் அதன் நாகை மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் சட்டநாதபுரத்தில் தப்பாட்டம், கரகாட்டம், பாடல்கள் மூலம் பெண் குழந்தைகளைக் காப்பது குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய சமூகத் திட்ட விரிவாக்க அலுவலர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com