கஜா புயல்: மன்னார்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கஜா புயல் காரணமாக மன்னார்குடியில் வியாழக்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

கஜா புயல் காரணமாக மன்னார்குடியில் வியாழக்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
கஜா புயல் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் எனவும், இதன் எதிரொலியாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த, மிக பலத்த காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை முதல் வானம் வறண்ட நிலையில் காணப்பட்டதுடன், காற்று வீசாததாலும், மழை பெய்யாததாலும் புயல் குறித்த வானிலை ஆராய்சி மையத்தின் அறிக்கை விவாத பொருளாளக மாறியதுடன், முகநூல்களில் அதிகளவில் கிண்டலுக்கும் உள்ளானது.
மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை பேருந்து நிறுத்தம், மின் நிறுத்தம் உள்ளிட்ட உறுதியற்ற தகவல்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மாலை 4 மணி வரை வானம் வறண்டநிலையிலேயே காணப்பட்டது. பின்னர் 5 மணிக்கு மேல் அவ்வப்போது லேசான மழை துளி விழுந்தாலும் அது மழையாக மாறவில்லை. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மாலை 5 மணிக்கு  பணியிலிருந்து புறப்பட்டதால், மாலையில் அனைத்து பேருந்துகளிலும் அதிகளவு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நகரின் பெரும்பாலன கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகளில் அதிகளவு வாடிக்கையாளர்கள் காணப்பட்டனர். 
முன்னெச்சரியாக நகராட்சி பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட உயர்கோபுர விளக்குகளை நகராட்சி ஊழியர்கள் கீழே இறக்கி வைத்ததுடன் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளும் அகற்றப்பட்டன. நகரம் முழுவதும் புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஆட்டோ  மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஒருசில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. இரவு 7.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது, காற்று வீசவில்லை.இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியதையடுத்து இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com