குடிநீர், மின்சாரம் இன்றி நீடாமங்கலம் பகுதி மக்கள் தவிப்பு

கஜாபுயல் காரணமாக, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் 36 மணிநேரம் மின்சாரம் இல்லாமலும், 2 நாள்களாக

கஜாபுயல் காரணமாக, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் 36 மணிநேரம் மின்சாரம் இல்லாமலும், 2 நாள்களாக குடிநீர் கிடைக்காததாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கஜா புயலால் நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சேதமடைந்தன. சாலைகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்ததால், கிராமப்புற சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொத்தமங்கலம் சாலையில் மேல்நிலை நீர்தேத்கக் தொட்டியின் மேல் மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயலுக்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மின்சாரம், புயலுக்குப் பின்னும் வழங்கப்படாததால், நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் கிராமப்புற மக்கள் 24 மணி நேரம் இருளிலும், 12 மணிநேரம் பகலிலும் மின்சாரம் இல்லாத நிலையில், தங்கள் வீடுகளில் முடங்கினர்.
நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒரு சில கிராமங்களில் மட்டும் சனிக்கிழமை காலை மின்விநியோகம் செய்யப்பட்டது. 36 மணிநேரத்துக்குப் பிறகு மின்சாரம் கிடைத்த போதிலும், அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டது. மின்சாரம் தடைபட்டதால், கடந்த 2 நாள்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயலாததால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது.
நீடாமங்கலம் பகுதி வழியாக பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் சனிக்கிழமையும் தாமதமாகவே சென்றன. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com