திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்னா

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தகாத வார்த்தையில் பேசி, தாக்க முயன்றவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, தர்னா போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தகாத வார்த்தையில் பேசி, தாக்க முயன்றவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, தர்னா போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு, காவல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை இரவு நோயாளிகளுடன் வந்தவர்கள் சிலர், பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் தண்ணீர் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அத்துடன் தகாத வார்த்தையில் பேசி, அவர்களைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவக் கல்லூரி வளாகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com