பாதித்த இடங்களில் ஓரிரு நாள்களில் இயல்பு நிலை திரும்பும்: அமைச்சர் கே.சி. வீரமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிரமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஓரிரு நாள்களில்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிரமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஓரிரு நாள்களில் இயல்பு நிலை திரும்பும் என்றார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி. 
திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்டவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 
திருவாரூர் நகரப் பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். மற்ற பகுதிகளில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 
பாதிப்படையாத மாவட்டங்களிலிருந்து மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் சாய்ந்திருந்த மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து, அந்த பணிகளை  4 அமைச்சர்களும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் விரைவுப்படுத்தி வருகின்றனர். 
இன்னும் ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட கிராம பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். 
கூட்டத்தில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மணிவாசன், போக்குவரத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கோட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com