செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா

DIN | Published: 12th September 2018 06:48 AM

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம், சித்தாம்பூர், வெள்ளக்குடி ஊராட்சிகளில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 573 பேர், தி.மு.க.வில் திங்கள்கிழமை இணைந்தனர்.
இதையொட்டி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், திமுகவைச் சேர்ந்த சித்தாம்பூர் வழக்குரைஞர் எஸ். மகாதேவன், வெள்ளக்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஏ. மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் சித்தமல்லி ந. சோமசுந்தரம், மன்னார்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, நீடாமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் (வடக்கு) விசு. அண்ணாதுரை,(தெற்கு) வை. மாயவநாதன், நகர செயலாளர் ஆர். ராஜசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


 

More from the section

தேசிய சாகச விழா: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
மின்சாரம் வழங்கக்கோரி சாலை மறியல்
திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருத்துறைப்பூண்டிக்கு வலங்கைமான் உதவிக்கரம்