18 நவம்பர் 2018

விநாடி - வினா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN | Published: 12th September 2018 06:47 AM

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டி மற்றும் அறிவியல் நேரடி நிகழ்வுகள் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காந்திய காமராஜர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அந்த தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு மின்விசிறிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கும் "பாடம்' என்ற திரைப்படத்தின் உதவி இயக்குநர் தமிழழகன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். அறிவியல் மன்ற பொறுப்பாளர் அறிவியல் ஆசிரியர் அன்பரசு அறிவியல் செயல்பாடுகளை நிகழ்த்தி காண்பித்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணிராஜ், முத்துலெட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

கூத்தாநல்லூரில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள்
கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். 
கஜா புயல் பாதிப்பு: சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்


குடிநீர், மின்சாரம் இன்றி நீடாமங்கலம் பகுதி மக்கள் தவிப்பு

மின் இணைப்பு: இளைஞர்களுக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு