திருவாரூர்

அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கல்

DIN

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 
உடலியல் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், தொடையிலிருந்து பொருத்தப்பட்ட செயற்கை கால்கள்-2, மூட்டுக்கு கீழே பொருத்தப்பட்ட செயற்கை கால்கள், மூட்டுடன் பொருத்தப்பட்ட செயற்கை கால்கள் என நான்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இக்கருவிகளின் மொத்தம் மதிப்பு ரூ. 3.35 லட்சமாகும். மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.கே.விஜய்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களை வழங்கினார். இதில், உடலியல் மற்றும் மறுவாழ்வுத் துறைத் தலைவர் பி. உதயசிங், உதவிப் பேராசிரியர்கள் திருச்செல்வி, பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT