நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளி தலைமையாசிரியர் பூ. திருமாறன் தலைமை வகித்தார். எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரெ. வெங்கடேசன், மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா, உடற்கல்வி இயக்குநர் கி. பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பொ. சக்கரபாணி
வரவேற்றார். 
நாட்டு நலப் பணித் திட்டத்தின் தோற்றம், குறிக்கோள், வரலாறு, சின்னம், அரசு தொடர்புடைய செயல்பாடுகள், நிறுவனம் தொடர்புடைய செயல்பாடுகள், கிராமப்புற, நகர்ப்புற செயல்பாடுகள், பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், விருதுகள் குறித்து பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா, தலைமையாசிரியர் ரெ. வெங்கடேசன், திட்ட அலுவலர் பொ. சக்கரபாணி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
இதில், அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர்கள் கோட்டூர் ஜெ. இளம்பரிதி, உள்ளிக்கோட்டை எம். வேல்முருகன், பெருகவாழ்ந்தான் எ. முத்துசிவா, சேரன்குளம் கே. சிவபரஞ்சோதி, ஆவூர் எம். கதிர்ஞானி, திருவாரூர் வேலுடையார் எஸ். சக்திதாசன், குளிக்கரை என். பன்னீர்செல்வம், கோவிலூர் எஸ். மகாலெட்சுமி, கொரடாச்சேரி எம். மதுரபூசணி, அம்மையப்பன் ஆர். வனிதா, மன்னார்குடி பி. அபிராமி, முத்துப்பேட்டை ரஹமத் பள்ளி கே. புனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பின் சார்பில், அனைவருக்கும் மரக்கன்றுகளை தலைமையாசிரியர் பூ. திருமாறன் வழங்கினார். நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் எஸ். தனபாலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com