திருவாரூர்

மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நில வள நீர் வளத் திட்டத்தின் கீழ், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பசுந்தாள் பயிர்களை மடக்கி உழுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிட செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல் விளக்கத் திடலில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
  இம்முகாமில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் மு.ராமசுப்ரமணியன் பேசும்போது, மண் வளத்தைக் காக்க மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடவேண்டும் என்று விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். உதவிப் பேராசிரியர் அனுராதா பேசும்போது, மண்ணின் வளத்தைப் பேணிக் காக்கவில்லையெனில் மண்வளம் குன்றி  உணவு உற்பத்தி  பாதிக்கப்படும் என்றார்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் பேசும்போது, "தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பதற்கும், பயிர் அறுவடைக்குப் பின் மண்ணிலுள்ள ஊட்டச் சத்துக்களின் நிலையை அறிவதற்கும், மண் அரிமானம், நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணங்களால் மண் வளம் குன்றிவிடுவதை அறிவதற்கும் மண் பரிசோதனை அவசியம்' என அறிவுறுத்தினார். மேலும்,  மண் வளத்தைப் பாதுகாக்க தொழுஉரம், பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை நிலங்களில் விதைத்து அவை வளர்த்தவுடன் உழுதல், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்துதல் போன்ற முறைகளைக் கையாள விவசாயிகள் முன்வரவேண்டும் என முகாமில் வலியுறுத்தப்பட்டது.  பின்னர், மண் மாதிரி சேகரிப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், மண் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. இந்த முகாமில் விவசாயிகள், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT