பாசன வாய்க்காலை சுத்தம் செய்த விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சாக்கடையாக மாறியிருந்த பாசன  வாய்க்காலை கிராம மக்கள் தூர்வாரி, வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சாக்கடையாக மாறியிருந்த பாசன  வாய்க்காலை கிராம மக்கள் தூர்வாரி, வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனர்.
கூத்தாநல்லூரை அடுத்த மேலப்பனங்காட்டாங்குடி கிராமத்தில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள பாசன வாய்க்கால் வழியாக வரக்கூடிய  தண்ணீர், வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பனங்காட்டாங்குடியில் உள்ள அன்னமரசலாறு வாய்க்காலில் கலக்கிறது. இந்த பாசன வாய்க்காலில் ஹோட்டல் கழிவுகள், நெகிழிப் பைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் கொட்டப்படுவதால், சேறும், சகதியுமாகக் காட்சியளித்தது. இதனால், பாசன வாய்க்கால் சாக்கடையாக மாறி, விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து, பாசன வாய்க்காலை உள்ளூர் பொதுமக்களே சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, மேலப்பனங்காட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வி. ரெகுபதி பாண்டியன், பி. முருகையன், யு. அய்யாதுரை, யு. பாண்டியன், கே. துரைமுருகன், தனசேகரன் உள்ளிட்ட இளைஞர்களும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாசன வாய்க்காலை வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனர். இதன் பலனாக விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com