திருவாரூர்

கடைமடை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல கரைக்காவலர்களை நியமிப்பது அவசியம்: பி.எஸ்.மாசிலாமணி

DIN


கடைமடை வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த, கரைக்காவலர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும் என்ற போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதிக்குள் நீண்ட கால ரகம், செப். 15-க்குள் நடுத்தர கால ரகம், அதன் பிறகு குறுகிய கால ரக விதைகளை விதைக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது.
விதைக்கப்பட்ட நீண்ட கால ரக விதைகள் முளைத்து, தண்ணீரின்றி கருகி விட்டன. நடுத்தர கால விதைகள் முளைவிடவில்லை. தற்போது, குறுகிய கால விதைகளை விதைக்க தண்ணீர் வயலுக்கு வரவில்லை. வாய்க்கால்களில் தண்ணீர் சென்றாலும் வயல்களில் ஏறி தண்ணீர் பாய்வதில்லை. சில பகுதிகளில் சாகுபடி நடப்பதே ஆயில் இஞ்சின்கள் மூலம் தான். இதனால் கூடுதல் செலவு, சிரமம் மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் நிகழாண்டு சாகுபடியை தொடங்கிய விவசாயிகள், அச்சத்துடனேயே உள்ளனர். தண்ணீர் பிரச்னையால் நிகழாண்டு வேளாண் மகசூல் மற்றும் வேளாண் வருமானம் குறைந்தால் அதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும் என்ற நிலையில் அதற்கு முன் நெற்பயிர்களை வளர்க்க, மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்.
கூடுதல் நீர் திறந்தால் முக்கொம்பு அணை உடைப்பின் தற்காலிக அடைப்பு தாங்குமா என்ற அச்சம் அரசுக்கு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கே இப்படி என்றால் பின் நவம்பர் மாதவாக்கில் வரும் வெள்ளத்தை எப்படி தாங்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இதற்கிடையில், காவிரி டெல்டாவுக்கென தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறப்பு செயலராக தமிழக அரசு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இதைவிட முக்கியமான தேவை கரைக்காவலர்களை நியமிப்பதாகும். ஆறு, வாய்க்கால்களில் பல இடங்களில் தடைகளும், ஆழமாகவும், மேடாகவும் உள்ளதால், தண்ணீர் முறையாக சென்றடையாததற்கு ஒரு காரணமாகும். இவைகளை கண்டறியவும், உரிய முறையில் அவசரமாக சரி செய்ய துறை நிர்வாகத்திடம் கூறவும், லஸ்கர்கள் ஒரு வட்டாரத்திற்கு ஓரிருவரே உள்ளனர். எனவே அவசர, தற்காலிக ஏற்பாடாகவாவது கரைக்காவலர்களை நியமித்து இவைகளை சரி செய்தால்தான் தண்ணீர் முறையாக செல்லும் என்பதோடு, மழை வெள்ள நீரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், பயிர்களை பாதுகாக்க முடியும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மறு சாகுபடி மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு விதை மற்றும் உழவுக்கான தொகை, டீசல் ஆகியவற்றை முழு மானியமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT