திருவாரூர்

சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்

DIN


சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி, மன்னார்குடி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
மன்னார்குடியை அடுத்த புழுதிக்குடி, தெற்கு ஏரி, ஆலிவலம், சித்தாலக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடிக்காக வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைவாக தண்ணீர் வருவதால், நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடவாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதைக் கண்டித்தும், உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் கோட்டூர் சத்திரம் பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புழுதிக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் தலைமையில் இம்மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கண்ணப்பன், கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சீலி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வடவாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தரப்பில் உறுத்தியளிக்கப்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT