காஷ்மீர் தாக்குதல்: உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில்  உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில்  உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள்  நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 
இந்த கொடூர சம்பவத்தைக் கண்டிப்பதோடு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திருவாருர் அருகே பழையவலம் கடைவீதியில் பொதுமக்கள் சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், கைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மௌன ஊர்வலம்...
நன்னிலம், பிப். 17: நன்னிலம் அருகே உள்ள எரவாஞ்சேரியில் சனிக்கிழமை மாலை மௌன ஊர்வலம் நடைபெற்றது.  எரவாஞ்சேரி கடைத்தெரு பெட்ரோல் பங்க் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் மற்றும் கடைத் தெரு வழியாக பெரியார் சிலை வரை நடைபெற்றது. பின்னர், உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம்  மௌனஅஞ்சலி செலுத்தினர். 
பின்னர், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் உளவுத் துறையை செம்மைப்படுத்த வேண்டும். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை மத்திய அரசு தத்து எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதில் சமூக ஆர்வலர் கல்யாணசுந்தரம், எரவாஞ்சேரி லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் என்.என்.வி. சீனிவாசன், வர்த்தக சங்கச் செயலாளர்கள் எஸ். சாந்தகுரு  வி. ராமலிங்கம், கட்டட சங்கத் தலைவர் எம்.என். ரஹமத்துல்லா, லிபர்டி சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com