திருவாரூரில் நாட்டியப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை

நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கிப் பேசியது:

நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கிப் பேசியது:
சிதம்பரத்தில்  நடனம் ஆடும் இறைவனுக்கு, ஆடல் வல்லான் எனப் பெயர் உண்டு. அதேபோல் தியாகராஜ சுவாமியை, இருந்தாடும் அழகர் என குமரகுருபரர் கூறுவார். திருவாரூரில் நடன மகளிர் எப்போதுமே கெளரவிக்கப்படுவது வழக்கம். தியாகராஜர் சுவாமி  வீதிக்கு வரும்போதெல்லாம், நடன மகளிர் நடனம் ஆடியபடி வருவர். சுவாமி தேருக்கு எழுந்தருளியபிறகு அவர் என்ன ஆடை அணிந்திருக்கிறாரோ, அதே போல நாட்டிய மகளிருக்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு, கெளரவம் செய்யப்படுவர். ஒரு காலத்தில் வீதிகளில் ஆடப்பட்டு வந்த நடனம், தற்போது தெய்வீகக்   கலையாக மாறிவிட்டது. 
திருவாரூர், இசைக்கென மும்மூர்த்திகளை கொடுத்தது. திருவாரூரில் பிறந்த தியாகராஜரின் சமாதி திருவையாறில் உள்ளது. அங்கு இசைக்கல்லூரி உள்ளது. நடனத்துக்கு கெளரவத்தை அளித்த திருவாரூரில் தியாகராஜர் பெயரில் நாட்டியத்துக்கென பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். விரைவிலேயே அந்த பல்கலைக்கழகம் உருவாகி,  ஏராளமான நாட்டியக் கலைஞர்களை கொடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com