கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்அருகேயுள்ள திருநல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீகல்யாண

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்அருகேயுள்ள திருநல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மாசிமக மஹோத்ஸவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. 
இக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சுவாமிகளால் போற்றப்பட்ட சிறப்புடையது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமச்சாரிய சுவாமிகள் அருளாசிப்படி மாசிமக மஹோத்ஸவம் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும், இரவில், சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 
திருத்தேர்: விழாவைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மீனலக்னத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். மதியம் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று விட்டு இரவு நிலைக்கு வந்தது. பின்னர் ஸ்ரீசிவகாமி அம்மை சமேத நடராஜர் தேர்க்கால் பார்த்து வந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இன்று மாசிமக தீர்த்தவாரி: செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19)  காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் ரிஷபலக்னத்தில் மாசிமக தீர்த்தவாரியும், இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருநல்லூர் ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் ஸ்ரீமத்சுவாமிநாததம்பிரான் கட்டளை விசாரணை மற்றும் கோயில் கண்காணிப்பாளர் கோ. சுந்தரம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com