"முதல் மதிப்பெண்ணை விட முதல் மதிப்பெண் எடுப்பவரை ஜெயிக்க வேண்டும்'

முதல் மதிப்பெண்ணை விட முதல் மதிப்பெண் எடுப்பவரை ஜெயிக்க நினைக்க வேண்டுமென பேராசிரியர் பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.

முதல் மதிப்பெண்ணை விட முதல் மதிப்பெண் எடுப்பவரை ஜெயிக்க நினைக்க வேண்டுமென பேராசிரியர் பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.
கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியின் 36-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை நீதியரசர் பஷீர் அஹமது சையது பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு பேசியது:
பெண்கள் ஒழுக்கத்துக்கு மாறான காரியங்களைச் செய்துவிடாமல், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தின் பெயர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி. கடந்த 1928-ஆம் ஆண்டு வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் கூட படித்து, பட்டம் வாங்க முடியாத நிலை இருந்தது. 1948-ஆம் ஆண்டு வரையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் கூட நுழைய முடியவில்லை. ஆனால், 1872-ஆம் ஆண்டு அதாவது ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு இடம் ஒதுக்கியிருந்தனர்.
இந்த பள்ளிக்கூடத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவியர் படிப்பதில் பெரும் மகிழ்ச்சி. அனைவரும் புத்தகம் வாசிக்க வேண்டும். நம்மிடம் இரண்டு ஆயுதங்கள் உள்ளன. ஒன்று வாகனம்,  மற்றொன்று வீட்டில் வைத்திருக்கும் கத்தி. இந்த இரண்டையும் தவறாக பயன்படுத்தினால், உயிருக்கு ஆபத்தாக முடியும். இதேபோல், கையில் வைத்திருக்கும் செல்லிடப்பேசியும், வாகனமும் கத்தியைப் போன்றதுதான். செல்லிடப்பேசியைத் தவறாக பயன்படுத்தினால், நமது வாழ்க்கை விபத்தில் முடிகிறது.
கையில் இருக்கும் ஆயுதத்தை மிகச் சரியாக பயன்படுத்தக் கூடியவர்கள் வாழ்க்கையில் உயருகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற வாய்ப்பு வரும்போது, அதை முறையாக பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் என்பது பெரிய பொறுப்பு. பெற்றோர் என்றால் இறைவனின் கருணையாலும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தாலும் குழந்தை வரம் பெற்றவர்கள் என்பது பொருள். ஆசிரியர் என்ற சொல்லில், ஆ - என்றால் குற்றம் என்றும், சிரியர் என்றால் களைதல் என்றும் அர்த்தம். அதாவது, குற்றத்தைக் களைபவர் எனப் பொருள். மாணவர்கள் முதல் மதிப்பெண் எடுப்பதை விட முதல் மதிப்பெண் எடுப்பவரை ஜெயிக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தார். தாளாளர் ஜே.பி. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். அகாதெமி ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் வஹாப் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், சென்சாய் ராம்குமாரின் பயிற்சியில் கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com