ஜெயலலிதா பிறந்த நாள்: 120 ஜோடிகளுக்கு இன்று திருமணம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் வெள்ளிக்கிழமை 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் வெள்ளிக்கிழமை 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாள் பிப்.24 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி திருவாரூரில் அதிமுக சார்பில், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.  இவர்களுக்கு தங்கத்தாலி, வேட்டி, சட்டை, கட்டில், மெத்தை உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. 
இந்த திருமண விழாவுக்கென தஞ்சை சாலை வன்மீகபுரத்தில் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழக உணவுத் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. கோபால், கு. பரசுராமன் ஆகியோர் முன்னிலை
வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன், சி. விஜயபாஸ்கர், இரா. துரைக்கண்ணு, வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com