நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணியை கோடை காலத்தில் தொடங்க வேண்டும்: பொதுநல அமைப்புகள் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரயில்வே  மேம்பால கட்டுமான பணியை வரும் கோடை காலத்திலேயே

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரயில்வே  மேம்பால கட்டுமான பணியை வரும் கோடை காலத்திலேயே தொடங்க வேண்டும் என மன்னார்குடியில் உள்ள அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ். ஹரேஷ் தலைமை வகித்தார். நீடாமங்கலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்கு ரயில்வே துறை ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், பாலம் கட்டுவதற்கான நில எடுப்பு பணிகள் கூட இன்னும் நிறைவடையாத நிலை உள்ளது. இதுபோன்று காலதாமதம் ஏற்படுமானால், ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியுள்ள நிதியும் வேறு பணிகளுக்கு மாற்றப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மேம்பால கட்டுமான பணியை வரும் கோடை காலத்திலேயே தொடங்கி விரைந்து முடிக்கும் வகையில் தமிழக அரசு தனது நில எடுப்பு பணியை விரைவாக செய்து, ரயில்வே துறையுடன் இணைந்து மேம்பால கட்டுமான பணியையும் விரைவுப் படுத்த வேண்டும். மன்னார்குடி ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செம்மொழி விரைவு ரயிலைப் பயன்படுத்தி, மன்னார்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில் பகல் நேரத்தில் இயக்க வேண்டும், மன்னார்குடி -பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும், மன்னார்குடி ரயில் நிலையத்தில் ஏடிஎம் கவுண்டர் மற்றும் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 இதில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலர் காவிரி எஸ். ரங்கநாதன், வர்த்தக சங்கம், ரோட்டரி, லயன்ஸ், ஜேசிஐ அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம், பசுமைக்கரங்கள், மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com