இன்று விவசாயிகள் வெகுமதி திட்டம் தொடக்கம்: பிரதமரின் உரை நேரடி ஒளிபரப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் வெகுமதி திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமரின் உரை ஞாயிற்றுக்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் வெகுமதி திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமரின் உரை ஞாயிற்றுக்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி,  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்கும் பிரதமரின் உரை காலை 11 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 
நிகழ்ச்சியில், வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்று, இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com