வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. புலிவலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


திருவாரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. புலிவலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
2019 ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்து, இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க படிவம் 6- ஐ பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் அளவு வண்ண நிழற்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் எனவும், இறந்த அல்லது வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்வதற்கு படிவம் 8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி, திருவாரூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில், தேவையான விண்ணப்பங்களை அளித்தனர். திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com