தில்லியில் குழந்தைகள் நாடக விழா நவ.17-இல் தொடக்கம்

தில்லியில் குழந்தைகள் நாடக விழா (ஜஷ்னே பச்பன்) நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தில்லியில் குழந்தைகள் நாடக விழா (ஜஷ்னே பச்பன்) நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநர் சுரேஷ் சர்மா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
டிஜிட்டல் வளர்ச்சியில் நாடகத்தின் மகத்துவம் குறைந்து வருகிறது. குறிப்பாகத் தற்காலத் தலைமுறை குழந்தைகளுக்கு நாடகம் குறித்து விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் நாடகம், இசை, ஓவியம் குறித்த பாடமும் இல்லை. நாடகத்தை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும். நாடகக் கலை வடிவம் ஒருவரது உணர்வுகளை வெளிக்கொணர உதவும். அதுமட்டுமல்லாமல் ஒருவரின் ஆளுமையையும் மேம்படுத்தும் என்றார். தேசிய நாடகப் பள்ளியின் நாடக கல்வியின் தலைவர் அப்துல் லதீஃப் கூறுகையில், "ஜஷ்னேபச்சபன் நாடக விழா குழந்தை பருவத்தையும், சூழ்ச்சியற்ற இயல்பையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா அனைத்து வயதினரையும் ஈர்க்கும், சமூகத்தையும் ஒருங்கிணைக்கும்' என்றார்.
இந்த நாடக விழாவில் இலங்கை, ஸ்விட்சர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து 21 நாடகங்களும், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், கேரளம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து 24 குழுக்கள் சார்பிலும் நாடகங்கள் நடத்தப்படும்.
நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பிற்பகல் 3.30, மாலை 5.30, மாலை 7 ஆகிய நேரங்களில் நாடகங்கள் நடைபெறும். இந்த நாடக விழாவைக் காண குழந்தைகளுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 50 என்ற வீதத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். இவை நிகழ்ச்சி நடைபெறும் நாளில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையிலும் நாடகப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்திலும், "புக்மைஷோ' இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com