மே மாதத்துக்குள் அனைத்து டிடிசி பேருந்துகளில் சிசிடிவி கேமரா: நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தில்லியில் உள்ள அனைத்து டிடிசி பேருந்துகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் 

அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தில்லியில் உள்ள அனைத்து டிடிசி பேருந்துகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மணீஷ் குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தில்லி டிடிசி பேருந்தில் பயணம் செய்தபோது தனது மடிக்கணினியை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்க கூறி, தில்லி காவல் துறையினர் தன்னை அலையவிட்டு கடைசியில் புகாரே பதிவு செய்யவில்லை. ஆகையால், அனைத்து டிடிசி பேருந்துகளிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு கருவிகள் அனைத்தும் அமைக்க உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுகொண்டிருந்தார்.
இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, தில்லியில் இனிமேல் வாங்கப்படும் அனைத்து டிடிசி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தில்லி அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கௌதம் நாராயண், "தில்லியில் உள்ள அனைத்து டிடிசி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் இதற்கான பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தில்லி அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
இதையடுத்து, தில்லி அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com